திமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளரும் திமுக செய்தி தொடர்பாளருமான பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவர்களை குறித்து தவறான செய்தியும் அவர் படத்தை தவறான முறையில் சித்தரித்து விமர்சனம் செய்திருக்கும் பாஜகவினரை கண்டித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று குடியாத்தம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி அவர்களிடம் குடியாத்தம் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய திமுக செயலாளர் N.E.சத்யானந்தம் மற்றும் குடியாத்தம் நகர மன்ற தலைவர் நகர செயலாளர் S.சௌந்தர்ராஜன், கே.வி.குப்பம் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் K.ராஜ்கமல் மற்றும் குடியாத்தம் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் புகார் அளித்துள்ளார்கள்.


தொடர்ந்து குடியாத்தத்தில் பாஜகவினர் அலைபேசி மூலம் குடியாத்தம் குமரன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அந்த அலைபேசி எண்ணை வைத்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment