கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 11 June 2023

கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி.


வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த 58 வது வார்டு ஏஜி நகர் கிராமத்தில் பல ஆண்டுகளாக தார் சாலைகள் இல்லாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் வேதனை.

அரியூர் அடுத்த 58 வது வார்டு ஏ ஜி நகர் கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வெளியில் செல்ல வழி இல்லாமல் தங்குவதால் கொசு மற்றும் டெங்கு காய்ச்சல் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது இதனால் அப்போது மக்கள் சேரும் சகதியில் நடப்பதும் துர்நாற்றத்திற்கு கொசுக்களுக்கும் ஆளாகி வருகின்றார்கள்.


சாலைகளையும் கால்வாய்களையும் அமைத்துத் தருமாறு அரசு அதிகாரிகளுக்கு இதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த ஒரு முயற்சி இல்லாமல் இருந்து வருகின்றது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கட்சியின் முதல்வர் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்று உடனடியாக தார் சாலையும் கழிவுநீர் கால்வாயும் அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொதுமக்கள் சார்பிலும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பிலும் கோரிக்கை.


- அணைக்கட்டு தாலுகா செய்தியாளர் ஏஜி கஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad