வேலூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் வேலூர் மாவட்ட பாரம்பரிய சிலம்பம் அசோசியேஷன் சார்பில் காட்பாடியில் உள்ள சிருஷ்டி பள்ளியில் மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இன்டர்நேஷனல் தலைவர். சந்தோஷ்குமார், மாநில தலைவர் எஸ்.கே.தேவநாதன், மாநில பொதுச் செயலாளர் வி.அருண், மாநில துணைத்தலைவர் அசோக்குமார ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


வேலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் தலைமை ஏற்று நடத்தினர். இவ் விளையாட்டுப் போட்டியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .
No comments:
Post a Comment