ரேஷன் கார்டுகளில் திருத்தும் மேற்கொள்ள சிறப்பு முகாம்; வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 10 June 2023

ரேஷன் கார்டுகளில் திருத்தும் மேற்கொள்ள சிறப்பு முகாம்; வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வேலூர் மாவட்டம் 10.06.2023 சனிக்கிழமை  காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி   வேலூர் தாலுகா - நெல்வாய் கிராமத்திலும், அணைக்கட்டு தாலுகா - அத்தியூர் குருமலை கிராமத்திலும், காட்பாடி தாலுகா - மேல்பாடி கே.ஆர்.நகரிலும், குடியாத்தம் தாலுகா - மேற்கு சைனகுண்டாவிலும், கே.வி.குப்பம் தாலுகா - பனமடங்கி கிராமத்திலும், பேர்ணாம்பட்டு தாலுகா - குண்டலப்பள்ளியிலும் நடக்கிறது.

இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். 


பொது விநியோகத்திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் இம்முகாமில் அலுவலர்களிடம் தெரிவித்து பரிகாரம் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்


No comments:

Post a Comment

Post Top Ad