குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம், வேலூர்மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், சென்னை பூந்தமல்லி அரவிந்த் கண்மருத்துவமனை ஆகியவை இணைந்து திருவள்ளுவர் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் 300- க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 54- பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


முகாமுக்கு பொயட்ஸ் இயக்குநர் திரிவேணி சாமிநாதன் தலைமை வகித்தார். மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பி.சீனிவாசன் முகாமைத் தொடக்கி வைத்தார். மருத்துவர்கள் ஆகாஷ் சஞ்சய், ஆதித்யா, கமர் ஆகியோர் தலைமையில் மருத்துவர் குழு சிகிச்சை அளித்தது. முகாம் ஏற்பாடுகளை பொயட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த உஷா, சாந்தலட்சுமி, விமலா, சுமதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment