வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடியை அடுத்த சின்ன ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஆதி என்கிற பாலமுருகன் (வயது 14). விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் வீட்டிலிருந்து காலைக்கடன் முடிப்பதற்காக கொடுக்கந்தாங்கல் ஏரி பகுதிக்கு சென்றுள்ளார்.


அங்கு கை, கால்களை கழுவுவதற்காக ஏரியில் இறங்கியுள்ளார். அப்போது நிலைதடுமாறி ஏரியில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்.
No comments:
Post a Comment