வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் கௌதம் பேட்டை கஸ்பா அருள்மிகு ஸ்ரீகெங்கை அம்மன் திருவிழா இன்று (16.6.2023)காலை காலை 6 மணிக்கு தென் குளக்கரை பகுதியில் இருந்து சிரசு ஊர்வலம் வீதிவீதியாக வந்து சிரசு மண்டபத்தை அடைந்தது.


காலை 11 மணி அளவில் அம்மன் கண்திறப்பும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் மாலை 3 மணியளவில் மாவிளக்கு பூஜையும் இரவு 8 மணி சிரசு எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கௌதம் பேட்டை கஸ்பா பகுதியை சேர்ந்த இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர் பெரியவர்கள் செய்திருந்தனர். முன்னதாக நேற்று (15.6.2023) அன்று தேர்த்திருவிழாவும் இரவு 8 மணி அளவில் வான வேடிக்கை நிகழ்ச்சியும் மிக விமர்சியாக நடைபெற்றது அம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
- செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
No comments:
Post a Comment