காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 17 June 2023

காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.


வேலூர் மாவட்டம், காட்பாடி தாலூகா, காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் ச.சச்சிதாநந்தம் அவர்களுக்கும் 23 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியை எம்.ஷோபனா அவர்களுக்கும் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை தலைமை தாங்கினார். விழாவில் வேலூர் மாமன்ற துணை மேயர் சுனில்குமார், முதலாவது மண்டலத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் மற்றும் வேலூர் மாமன்றத்தின் முதலாவது வார்டு கவுன்சிலர் அன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் செ. நா. ஜனார்த்தனன் ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்து பாராட்டி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.


பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.குமரன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள், அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் உள்பட உள்ளுர் பிரமுகர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பள்ளிக் கல்வித் துறையில், காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகள் வணிகவியல் ஆசிரியராக பணி புரிந்து ஆயிரக்கணக்கான வணிகவியல் மாணவர்களை உருவாக்கிய ச.சச்சிதானந்தம் அவர்களையும், 23 ஆண்டுகள் பள்ளிக் கல்வித் துறையில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி பல தமிழ் ஆன்றோர்களை உருவாக்கிய எம்.ஷோபனா அவர்களையும் பாராட்டி சால்வைகள் அனிவித்து கௌரவித்தனர்.


பள்ளி ஆசிரியர் சங்க செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சொ.குணசேகர் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் என்சிசி முதன்மை அலுவலர் க.ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நன்றியுரையாற்றினார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad