காட்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் குமரனுக்கு முனைவர் பட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 June 2023

காட்பாடி அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் குமரனுக்கு முனைவர் பட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

வேலூர் மாநகரம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வரும் எஸ்.குமரன் அவர்களின் ஆய்வுகளுக்காக வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வேந்தர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் முனைவர் பட்டம் வழங்கினார்.

11 வேதி பொருட்களை கொண்டு கேன்சர் என்னும் புற்று நோய் கிருமைகளை கொல்ல ஆய்வு செய்து மருந்துகளை கண்டுபிடித்துள்ளார் இம் மருந்துகள் 70 சதவீத கிருமிகளை கொல்லும் ஆற்றல் பெற்றது என்றும் 20 சதவிகிதம் பின் விளைவுகள் ஏற்படுத்தும் நிலை உள்ளதாக அவர் கூறினார். 


 மேலும் இது தொடர்பான ஆய்வு கட்டுரைகளை வெளிநாட்டு பத்திரிகைகள் வெளியிட்டுட்ள்ளன.  இந்த ஆய்வு மேற்கொள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அனுமதி அளித்து பல்கலைகழக வேதியல் துறை த்தலைவர் முனைவர் எம்.என்.ஆறுமுகம் வழிகாட்டி ஆசிரியராக செயலாற்றினார். வழிகாட்டி ஆசிரியர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையினை சமர்பித்து அதில் தேர்ச்சி பெற்ற காரணத்தினால் வேலூர் திருவள்ளுவர் பல்கலைகழகம் ஆய்வில் நிறைஞர் (பி.எச்.டி) முனைவர் பட்டம் வழங்கியது.


முனைவர் பட்டம் பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் எஸ்.குமரன் அவர்களை பள்ளியின் தலைமையாசிரியை கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை, தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு, பணிநிறைவு பெற்ற ஆசிரியர் ச.சச்சிதானந்தம், இருபால் ஆசிரியர் பெருமக்கள், நண்பர்கள் உறவினர்கள், பள்ளி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad