வேலூர் மாவட்டம் குடியாத்தம் சப் கலெக்டர் அலுவலகத்தில் கோட்டா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு சப் கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது பேரணாம்பட்டு நகராட்சி வெளியேற்றப்படும் கழிவுநீர் பேர்ணாம்பட்டு ஏரியில் விடப்படுகின்றன. இதனால் ஏறி மாஸ் அடைகிறது எனவே கழிவு நீர் ஏறி விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குடியாத்தம் புதிய பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சேங்குன்றம் விஏஓ அலுவலகம் எந்த நேரத்திலும் பூட்டிய உள்ளது விஏஓ அலுவலகத்துக்கு வருவதே இல்லை இதனால் விவசாயம் சம்பந்தமான நிலை சம்பந்தமான சிட்டா உள்ளிட்ட சான்றுகள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இவ்வாறு விவசாயிகள் பேசினர் கூட்டத்தில் பல துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர். சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கலைவாணி நன்றி தெரிவித்தார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment