மாவட்ட கருவூல அலுவலர் முத்து.சிலுப்பனுக்கு பணி நிறைவு பாராட்டு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 4 June 2023

மாவட்ட கருவூல அலுவலர் முத்து.சிலுப்பனுக்கு பணி நிறைவு பாராட்டு.


வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக (கணக்கு) உதவியாளராக பணியாற்றி பின் திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற முத்து.சிலுப்பன் அவர்களுக்கு பாராட்டு விழா வேலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் இன்று 04.06.2023 நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  கருவூல கணக்குத்துறையின் கண்காணிப்பாளர் எம்.கண்மணி வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்   முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் பா.ராசேந்திரன் தொகுப்புரையாற்றினார். விழாவில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் பிரகாண், துணைத்தலைவர் கலைச்செல்வி, பொருளாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.



தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிறுவன தமலைவர் கு.செந்தமிழ்செல்வன், சமம் இயக்கத்தின் தலைவர் குணசுந்தரி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் முல்லைவாசன், செயலாளர் சகுவரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பெ.அமுதா, செயலாளர் டி.முனிசாமி, நிர்வாகிகள் அ.ஜோசப்அன்னையா, சா.குமரன், வீர.குமரன், ஆர்.வேல்முருகன், மு.பிரபு திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் சி.குணசேகரன், இராணிப்பேட்டை செயலாளர் பழனிவேல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுமதி, இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சென்னடி, செயலாளர் பரேம், முன்னாள் வேலூர் மாவட்ட தலைவர் க.சரவணராஜ், மோகனமூர்த்தி, வேலூர் வட்ட கிளை தலைவர் பூசாமி, ஓய்வூதியர் சங்க தலைவர் பி.ரவி, எம்.பன்னீர்செல்வம், என்.சுந்தரேசன், உள்ளிட்டோர் புத்தகங்கள் வழங்கி பாராட்டி பேசினர்.


மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வேலூர் குணசேகரி புண்ணியகோட்டி, திருப்பத்தூர் ஹரிகரன், இராணிப்பேட்டை ஆர்.சண்முகானந்தம், சுகுணசுப்பிரமணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  மேலும் வேலூர் இராணிபேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு கருவூல கணக்கு துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாலளர் சங்க நிர்வாகிகள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டினர். முடிவில் பா.சேகர் நன்றி கூறினார்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad