வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் வேலூர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. புரட்சியாளர் எம் ஜெகன் மூர்த்தியார் எம்எல்ஏ மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான இளம் புயல் மேகநாதன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய குழு உறுப்பினர் குட்டி என்கிற வெங்கடேசன் பி நந்தகுமார் கே நெப்போலியன் ஆர் கருணாகரன் டி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன எழுச்சி உறை டி ரூ சேந்திர குமார் பூங்கா நகர் பா காமராஜ் கே பலராமன் டி வின்சென்ட் கே எம் ஸ்ரீதர் பி பழனி மாரி ஆகியோர் எழுச்சி உரையாற்றினார்கள்.


இதில் குடியாத்தம் சுற்று வட்டார பகுதியில் இயங்கும் அரசு நிதி உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் அடாவடி கட்டணம் மற்றும் அதே பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை சேர்க்கை மறுப்பை தடுக்க தவறிய தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment