அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்ப்பு ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. 16.06.2023 முதல் 20.06.2023 வரை வேலூர் மாநகர மாவட்டத்தின் அனைத்து பகுதி வார்டுகளில், ஒன்றிய ஊரட்சிகளில், பேரூராட்சி வாரியாக உறுப்பினர் சேர்ப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


அதன்படி இன்று (17.06.2023) சத்துவாச்சாரி மேற்கு பகுதியில் மாலை 4.00 மணி 30வது வட்ட செயலாளர் நாராயணன் அவர்கள் ஏற்பாட்டில் சத்துவாச்சாரி மேற்கு பகுதி செயலாளர் அன்வர் பாஷா தலைமையில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் அப்பு பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அதிமுகவின் மாவட்ட சிறுபான்மையர் பிரிவு செயலாளர் மொய்தீன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் குமரகுருபரன், அதிமுக நிர்வாகிகள் நீல நாராயணன், மீனாட்சி சுந்தரம் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்.
No comments:
Post a Comment