வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் வானில் இருந்து மர்ம பொருள் விழுந்தது. பொதுமக்கள் ஆச்சரியத்துடன் ஆர்வத்துடன் கண்டு களித்தனர் உடனடியாக குடியாத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வானிலிருந்து விழுந்த மர்ம பொருள் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
அந்தப் பொருளை காவல்துறையினர் கைப்பற்றி காவல் நிலையம் எடுத்துச் சென்றுள்ள நிலையில் இந்த சம்பவத்தால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்


No comments:
Post a Comment