மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் ஏற்படுத்தியதற்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் தமிழக முதலமைச்சருக்கும் பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 6 June 2023

மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் ஏற்படுத்தியதற்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் தமிழக முதலமைச்சருக்கும் பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பு.


வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாட்டின் கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன் கல்வி வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு நூற்றாண்டு பழைமை வாய்ந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் பணியிடத்தை மீண்டும் இயக்குநர் பணிடமாக மாற்றி அரசாணை வெளியிட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தில் முனைவர்.க.அறிவொளி அவர்களை நியமைத்து அணையிட்ட  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்  பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் மனமார்ந்த நன்றியும் வரவேற்பும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் மாவட்ட தணிக்கையாளர் ச.சச்சிதானந்தம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு ஆகியோர் இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் ஒரே பணியிடமாக (Director of Public Instructions) என இருந்தை கல்வி வளர்ச்சியின் அடிப்படையில் மாணவர் நலன், ஆசிரியர் நலன், கல்வி மேலாண்மை உள்ளிட்ட காரணங்களினால் இப்பணியிடம்  பள்ளிக்கல்வி,தொடக்கக்கல்வி, மெட்ரிக் கல்வி, முறைசாராகல்வி, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, தேர்வுத்துறை உள்ளிட்ட பல இயக்குநரங்கள் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  

இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முந்தைய அஇஅதிமுக அரசு ஆணையர் என்ற புதிய பணியிடம் அறிமுகம் செய்த போது அதை அனைத்து வகை ஆசிரியர் அமைப்புகளும் எதிர்த்தன. ஏற்கெனவே பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச்செயலாளராக இந்திய ஆட்சிப்பணி அலுவலர் பணியிடம் நடைமுறையில் உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் பதவியினை இரத்து செய்து பழைய நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படும் பணியிடமாக தொடர ஆணையிட வேண்டுமென தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகமும் மற்றம் பல்வேறு ஆசிரியர் இயக்கங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். 


தமிழ்நாட்டின் கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன் கல்வி வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு நூற்றாண்டு பழைமை வாய்ந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் பணியிடத்தை  அரசாணை எண் 180 பள்ளிக்கல்வி நாள் 05.06.2023ன்படி பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தில் மீண்டும் பதவி உயர்வின் மூலம் பணி மாறுதல் மூலம் முனைவர் க.அறிவொளி தொடக்க கல்வி இயக்குநராக முனைவர்.ச.கண்ணப்பன் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக முனைவர் வி.சி.ராமேஸ்வரமுருகன், பள்ளிசாரா வயது வந்தோர் கல்வி இயக்குநராக முனைவர்.மு.பழனிச்சாமி, தமிழ்நாடு பாடநூல் பணிகள் கழக உறுப்பினர் செயலராக திரு.பெ.குப்புசாமி ஆகியோரை நியமித்து ஆணையிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் மனமார்ந்த நன்றியும் வரவேற்பும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


மேலும் 1978-79ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறையில் உள்ள மேல்நிலை தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ஆசிரியர் பணி ஒய்வு பெறவதால் மூடப்படும் நிலை உள்ளது.  இதனால் தற்போது சுமார் ஒரு ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது.  மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடம் நடைமுறை படுத்த வேண்டுகிறோம். தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டுகின்றோம்.


- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad