இதில் சித்தத்தூர் கிராமத்தில் சுமார் 110 குடும்பகள் உள்ளன இதில் 600 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றார்கள், இந்தப் பகுதியில் கடந்த 2018 -2019 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மற்றும் சமையலறை இன்று வரை திறக்கப்படவில்லை, இந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடை மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது மேலும் மளிகை பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை, இந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு முழுமையான மின்சாரம் சிங்கிள் பேஸ் மட்டுமே உள்ளது இதில் டிவி மிக்ஸி கிரைண்டர் போன்ற பொருள்கள் பயன்படுத்த முடியவில்லை.


இப்பகுதியில் குடிநீர் சின்டெக்ஸ் ஒன்று மட்டுமே உள்ளது கூடுதல் சின்டெக்ஸ் அமைத்து தர வேண்டும் 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஊருக்குள் புகுந்து விடுகிறது இதனால் தீவு போல் காட்சி அளிக்கிறது சித்தாத்தூர் வேப்பூர் இடையே ஆற்றில் தரை பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது உடன் தென்காந்தி மற்றும் ஊர் பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனா்
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment