குடியாத்தம் நகர லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 June 2023

குடியாத்தம் நகர லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதிவேற்பு விழாவில் ரூபாய் 50ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

 வேலூர் மாவட்டம் குடியாத்தம்   பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் குடியாத்தம் நகர லயன் சங்கம் (2023 2024) ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதிவேற்பு விழா மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைதல் மற்றும் ₹50ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி நல திட்ட உதவிகள் துவக்கம்  என முப்பெரும் விழா  (25.6.2023) அன்று மாலை 6மணிக்கு கூடநகரம்ரோடு கிருஷ்னாலயா திருமணமண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர லயனஸ் சங்க தலைவர் என். குமார் தலைமை தாங்கினார்.


இந்த  (2023 2024) ஆம் ஆண்டின் தலைவராக ஸ்ரீகாவியா ஜிவல்லரி உரிமையாளர் லயன் டி.கமலஹாசன் செயலாளர் எஸ்.முருகதாஸ் பொருளாளர் டிஆர்.ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு லயன்ஸ் சங்க  முதல் துணை ஆளுநர் எஸ். சுரேஷ்அவர்கள்  பதவி பிரமாணம் செய்து வைத்தார் புதிய உறுப்பினர்களை இனைத்து ₹50மதிபுள்ள பள்ளிமாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் கல்வி உதவித்தொகை ஏழை பெண்களுக்கு அரிசி மளிகை பொருட்க்கள் தினம் அண்ணதான வழங்கும் தொண்டு நிறுவனங்கள் வள்ளலார் கோட்டம் அண்ணபூரணி அண்ணதான குழு ஆகியவற்றிக்கு  2 மூட்டை அரிசி பருப்பு ஆகிய சேவை திட்டங்களை முன்னாள் ஆளுநர்கள் டிஎஸ். உதயசங்கர் அருண்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில்  மண்டலதலைவர் கருணாநிதி மாவட்டஅவை செயலாளர் சி. ராஜி சிவசக்திகோபால்  மாவட்ட அவை பொருளாளர் எம்கே. பொன்னம்பலம் மாவட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள்  காசிவிஸ்வநாதன்   ஜேஜிநாயுடு கார்த்திகேயன் ஏ. சுரேஷ்குமார் கிரிதர் பிரசாத் விவேகானந்தன் என்.எஸ். விவேகானந்தன் சி.சிவராஜ் எஸ். மோகன்  எல்சிஐஎப்  மாவட்ட ஒருங்கினைப்பாளர் டாக்டர் என். வெங்கடேஸ்வரன் பேர்னாம்பட் பொன்னை திருப்பத்தூர் குடியாத்தம் பொன்மனம் ரெயின்போ  நேஷ்னல் லயன்ஸ்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்  கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகினர். மேலும் இந்த ஆண்டின் தலைவர் செயலாளர் பொருளாளர் அவர்கள் சேவை  திட்டங்களை அறிவித்தனர் நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் அரசு நிர்வாகிகள்  மற்றும் பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தினர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன். 

No comments:

Post a Comment

Post Top Ad