வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி மறைந்த அண்ணல் தாங்கோ அவருடைய திரு உருவ சிலை அமைப்பதற்காக இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் குமரவேல் பாண்டியன் அவர்கள் இன்று புதிய பஸ் நிலையம் நேரு பூங்கா காமாட்சியம்மன் பேட்டை பகுதியில் ஆய்வு செய்தார்.


உடன் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் வட்டாட்சியர் எஸ் விஜயகுமார் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சிசில் தாமஸ் நகர மன்ற உறுப்பினர் அர்ச்சனா நவீன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையாளர் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment