வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாநகரம் மண்டலம் 1ல் காட்பாடி தாராபடவேடு ஏரி, கழிஞ்சூர் ஏரி ரூபாய் 27கோடியில் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக நடைபெற்றுவரும் பணிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல்குளம் பணிகள் மற்றும் சேர்க்காட்டில் கட்டப்பட்டு வரும் அரசு கலை கல்லூரி, மருத்துவமனை கட்டிட பணிகளை நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


உடன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் AP.நந்தகுமார், மாவட்ட ஆட்சி தலைவர் குமாரவேல் பாண்டியன், மாநகர மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மண்டல குழுத்தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், மாமன்ற உறுப்பினர்கள் டீட்டா சரவணன், திமுகவினர் மற்றும் அரசுத்துதுறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ்.

No comments:
Post a Comment