அனைத்து சட்ட உரிமைகள் விழிப்புணர்வு கழகத்தின் துணைத் தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் யுவராஜ், முதன்மைச் செயலாளர் ஏழுமலை, இளைஞர் அணி தலைவர் ஆம்புலன்ஸ் ராஜேஷ், வழக்கறிஞர் அணி தலைவர் ரமேஷ் மலானி, மகளிர் அணி தலைவர் ஜெயமணி, கல்வி அணி செயலாளர் சக்திவேல்,வேலூர் மண்டல தலைவர் சிவக்குமார், மண்டல செயலாளர் உதயகுமார், வேலூர் மாவட்ட தலைவர் சிவா, வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் ஆகியோரின் ஏற்பாட்டில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
குடியாத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மாறன் பாபு, மருத்துவர் மோத்திலால், செவிலியர்கள் பிரேமா, சத்யா, சதீஷ், உமேஷ்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவகுழு ரத்ததானம் பெற்றனர்.
இதில் குடியாத்தம் வட்டார காங்கிரஸ் தலைவர் வீராங்கன், கனவு அறக்கட்டளை துணைத் தலைவர் தேவ முகுந்தன், தமிழ் அஞ்சல் நாளிதழ் மாவட்ட நிருபர் வெங்கடேசன், சமூக ஆர்வலர் கே.வி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வேலூர் மண்டல மகளிர் அணி தலைவி சாந்தி, வேலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் இந்துமதி, வேலூர் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் காமாட்சி, குடியாத்தம் நகர மாணவியர் அணி கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment