இவ்விழாவிற்கு வேலூர் கிளை தலைவர் டாக்டர் டி.நைலேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் ஜி.மணிகன்டன் வரவேற்புரையாற்றி ஆண்டறிக்கை சமர்பித்து பேசினார். சங்க பொருளாளர் டாக்டர் எல்.சந்தானகோபால் நிதியறிக்கை வாசித்தார். மருத்துவர் தின விருது தொழிற்கல்வி ஆசிரியர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், மருத்துவர்கள் கே.இ.சம்பத், சுமிதா ரமேஷ் ஆகியோருக்கும் இந்த ஆண்டிற்கான மருத்துவர் தின விருதுகளை மாநிலத்தலைவர் டாக்டர் கே.எம்.அபுல் ஹாசன் வழங்கி பாராட்டி பேசினார்.
மருத்துவர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர்கள் டி.சடகோபன், எஸ்.தாமோதரன், மாநில துணைத்தலைவர் பி.டி.சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினர். முன்னதாக நாளைய மருத்துவரின் வாழ்க்கை நிம்மதியானதே– போராட்டமானதே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. சங்க கலைக்குழுவினரின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விருது பெற்ற விருதாளர்கள் ஏற்புரையாற்றினர். முடிவில் பொருளாளர் டாக்டர் எல்.சந்தானகோபால் நன்றி கூறினார்.
-வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்

No comments:
Post a Comment