வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ்நிலையத்தி்ல் மணி ப்பூர் மக்களை பிளவுபடுத்தி கலவரத்தை தூண்டிவிடும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் மீண்டும் அங்கு அமைதி நிலவிட நடவடிக்கை கோரி 11.07.23. காலை ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய நகர துணைசெயலாளர் ஜி. தங்கவேலு தலைமை வகித்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.மகேஷ்பாபு, கே.கல்பனா சந்தர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டசெயலாளர் முன்னாள் எம். எல். ஏ. ஜி. லதா, மாவட்ட துணைசெயலாளர் துரை செல்வம், மாவட்ட பொருளாளர் எஸ். காவேரி ஒன்றிய நகர செயலாளர் டி. ஆனந்தன், பேர்ணாம்பட்டு ஒன்றியநகரசெயலாளர் எஸ். பன்னீர்செல்வம் நிர்வாக்குழு கே.சி.பிரேம்குமார், ஒன்றி நகர துணைசெயலாளர், மாவட்ட நிர்வாகக்குழு டி.அருள்குமார், மாவட்டகுழு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்வில் வினாயகம், நா.பரமசிவம் கே.ஜெயராமன் ஜி.வீரபத்திரன், என்.ஜீவானந்தம் ஜே.சூரவேரலு பழணி டி.மணியரசன், ஜி.முனுசாமி நிறைமதிசெல்வன், ஆர்.அக்பர் உட்பட 50க்கும்மேற்பட்டோர் கலந்துகொண்டனர், முடிவில் சி.கருணாநிதி நன்றி கூறினார்.

No comments:
Post a Comment