வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ரோட்டரி கிளப் மூலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் T. முகேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.


போக்குவரத்து ஆய்வாளர் T. முகேஷ் குமார் அவர்கள் கூறுகையில் பள்ளி மாணவ மாணவியர்கள் நெடுஞ்சாலையில் கவனமுடன் நடை பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் 18 வயதிற்கு மேற்பட்டு தான் இருசக்கர வாகனம் இயக்க வேண்டும் பள்ளி மாணவ மாணவிகள் இயக்குவது மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என்று இந்நிகழ்ச்சியில் கூறினார்.
ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் பல்லி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment