வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் பத்தலப்பல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு காணொளி மூலமாக தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமரவேல் பாண்டியன் இ.ஆ.ப கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் ஒன்றிய குழு துணை தலைவர் லலிதா பேரணாம்பட்டு நகராட்சி துணைத் தலைவர் ஆலியர் ஜூபேர் அகமத் குடியாத்தம் வட்டாட்சியர் வெங்கட்ராமன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியர் செயற்பொறியாளர் கீதா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்

No comments:
Post a Comment