போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 18 July 2023

போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இன்று மாலை குடியாத்தம் போக்குவரத்து காவல்துறையும் குடியாத்தம் நகரலயன்ஸ் சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் தலைமை தாங்கினார்.


சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மணிவண்ணன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொடி அசைத்து துவக்கி வைத்து போக்குவரத்து காவலர்களுக்கு சாலையில் பணிபுரியும் போது ரிப்லெக்டர் யூனிபார்ம் உடையை குடியாத்தம் நகரலயன்ஸ் சங்கம் 50 காவலர்களுக்கு வழங்கப்பட்டது


மேலும் டிஜிட்டல்டெலிவரி தனியார் நிறுவனம் வழங்கிய  ஹெல்மெட்டுகளை 50 நபர்களுக்கு இலவசமாக வழங்கினார். நிகழ்ச்சியில் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி நகர காவல் ஆய்வாளர் லட்சுமி லயன்ஸ் கிளப் தலைவர் டி கமலஹாசன் செயலாளர் முருகதாஸ் லயன்ஸ் சங்க மாவட்ட பொருளாளர் எம்கே. பொன்னம்பலம் லயன்ஸ் நிர்வாகிகள் ஜேஜிநாயுடு வெங்கடேஸ்வரன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் இருசக்கர வாகன பழுது பார்க்கும் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சக்திவேல் குடியாத்த சங்க கௌரவ தலைவர்கள் ரமேஷ் சத்யராஜ் பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர் ஹெல்மெட் அணிந்து கொண்டு இரு  சக்கர வாகனத்தில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad