வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூட நகரம் கிராமத்தில் ஆடி 1ம்தேதி அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா (17.7.2023)அன்று நடைபெற்றது. காலை 6 மணி அளவில் கூட நகரம் பிள்ளையார் கோயில் தெருவில் இருந்து அம்மன் சிரசு புறப்பட்டு வீதி உலா நடைபெற்றது காலை 11 மணிக்கு அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும் 12 மணி அளவில் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் மாலை 4 மணியளவில் மாவிளக்கு பூஜையும் இரவு8 மணி அளவில் சிரசு எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தாரை தப்பட்டை பம்பை உடுக்கை இசை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு 8 மணி அளவில் வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது நிகழ்ச்சி ஏற்பாடுகளை கூட நகரம் கிராம இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பெரியோர்கள் செய்திருந்தனர் மேலும் (19.7.2023) அன்று அம்மனுக்கு பூப்பலுக்கு விழாவும் நடைபெறும் அது சமயம் பொய்க்கால் குதிரை கரகாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று விழா குழுவினர் தெரிவித்தனர்.
- குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்.கேவி.ராஜேந்திரன்



No comments:
Post a Comment