வேலூர் மாவட்டம் குடியாத்தம் சப் கலெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் நடந்தது. சப் கலெக்டர் நேர்முக உதவியாளர் கலைவாணி வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: நுாறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் எந்தெந்த விவசாய பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தலாம் என்ற விவரப் பட்டியலை வெளியிட வேண்டும். நாற்று நடுவது, களை பறிப்பது போன்ற விவசாயப் பணிகளின்போது 100 நாள் வேலையை நிறுத்த வேண்டும்.
மின்சார டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போனால் அதை போடுவதற்கு பியூஸ் ஒயர் இல்லை என மின்ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். போதுமான அளவுக்கு பியூஸ் ஒயர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலாலத்துார் கிராமம், சாவடி தெருவில் உள்ள விஏஓ அலுவலகத்தை புதிதாக கட்டித்தர வேண்டும். விதை கரும்பு ஏற்றி வந்த டிராக்டருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
இதில் கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், உதவி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment