வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலூகா கே.வி.குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ராஜகோயில் கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 15 லட்சத்தில் புதிதாக நியாய விலை கடைக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கே.வி.குப்பம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு புதிய நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி மற்றும் கல்வெட்டினை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார் பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் இதனைத் தொடர்ந்து கிராம மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர் இதில் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளார் ராமு நகர் மன்ற உறுப்பினரும் புரட்சி பாரத கட்சியின் மாவட்ட செயலாளர் மேகநாதன் கொண்டசமுத்திரம் பஞ்சாயத்து தலைவர் அகிலாண்டிஸ்வரி பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலூகா செய்தியாளர் கே.வி.ராஜேந்திரன்.

No comments:
Post a Comment