தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் எழுச்சி நாள் பேரணி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 July 2023

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் எழுச்சி நாள் பேரணி.


ஐந்து லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பிட கோரியும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி. 

வேலூர் பழைய பேருந்து நிலையம் டவுன் ஹால் அருகிலிருந்து பேரணி புறப்பட்டு பெல்லியப்பா கட்டிடம் வரை நடைபெற்றது.  இந்த பேரணிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ட்டி.டி.ஜோஷி, தலைமை தாங்கினார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி பேரணியை தொடக்கி வைத்து பேசினார்.


மாவட்ட செயலாளர் அ.சேகர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழக தமிழாசிரியர் கழக மாநில செயலாளர் வாரா, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட் செயலாளர் மா.பா.தீனதயாளன், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.


மாவட்ட துணைத்தலைவர்கள் பா.வேலு, ஜிவநாதன், பாலமுருகள் மாவட்ட இணை செயலாளர்கள் எஸ்.ராஜ்குமார், எம்.ஏழுமலை, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வில்வநாதன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலவர் சங்க பா.செல்வகுமார், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மா.தேவசேனன் மருந்தாளுநர் சங்க மாநில செயலாளர் தே.வேந்தன்  மகளிர் உறுப்பினர்கள் 100பேர் உள்பட 300 பேர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சு.சுமதி நன்றி கூறினார்.


கோரிக்கைகள் 

  1. ஐந்து லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் 
  2. பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  3. சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அனைவரையும் நிரந்தரப்படுத்திட வேண்டும்.
  4. கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கிட கோரி 
  5. நிரந்தர பணியிடங்களை அழித்திடும்   அரசாணைகள் எண்.115;139;152ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
  6. சாலைப்பணியாளர்களின் 41மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றிட வேண்டும்.


முடிவில் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad