இந்த பேரணியானது நேற்று மாலை 3 மணியளவில் புத்து கோவில் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி பேரணாம்பட்டு ஹை ரோடு வழியாக சென்று நான்கு கம்பம் அருகில் பேரணி முடிவு பெற்றது.இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.இதில் பேரணாம்பட்டு நகர மன்ற துணை தலைவர் மற்றும் திமுக நகர செயலாளருமான ஆலியார் ஜுபேர் அஹ்மத், திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனன், டேவிட்,தமுமுக மாநில துணை செயலாளர்C.K. சனாவுல்லா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையேற்று சிறப்புரை ஆற்றி பல்வேறு கண்டன உரைகளை நிகழ்த்தினார்கள்.
இதில் மனிதநேய மாவட்ட கட்சி தலைவர் ஆலியார் சுல்தான் அஹ்மத், விடுதலை சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் க.ப மறைமலை, போன்ற பல்வேறு கட்சியினர்கள் இதில் கலந்து கொண்டனர்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரணாம்பட்டு தாலுக்கவில் உள்ள அனைத்து திருச்சபைகள் நடத்தும் மத போதகர்கள் மற்றும் கிருஸ்துவ பெண்மனிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கொட்டும் மழை என்றும் பாராமல் பேரணி மற்றும் கண்டனம் ஆர்ப்பாட்டம், தொடர்ந்து நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்

No comments:
Post a Comment