வேலூர் மாவட்டம் 1806 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 10 நாள் சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. வேலூர் கோட்டை எதிரில் நிறுவப்பட்ட சிப்பாய் புரட்சியில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமரவேல் பாண்டியன் இ.ஆ.ப சட்டமன்ற உறுப்பினர் ஏ நந்தகுமார் பா கார்த்திகேயன் குடியாத்தம் அமுலு விஜியன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி இ.கா.ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இ.கா.ப முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக உதவி இயக்குனர் லிப்டினல் கர்னல் கா ஞானசேகர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு .இன்பராஜ்.

No comments:
Post a Comment