தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 29 July 2023

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


வேலூர் மாவட்டம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவில் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் சி ஜெயக்குமார் மாவட்ட தலைவர் எம்.எஸ்.செல்வகுமார், பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி தமிழாசிரியர் கழக மாவட்ட செயலாளர் கு.சங்கர் ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் பயணம்.

மாநில சட்ட செயலாளர் காந்தி மாவட்ட பொருளாளர் கே தனசேகர் தலைமை இட செயலாளர் ரகுராமன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர், இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்புக்குழுவின் உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தேர்தல் வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாமல் தட்டிக் கழித்து வரும் தமிழ்நாடு அரசின் போக்கை கண்டித்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  


ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்த நிலையில் ஆட்சியாளர்கள் நமக்கு அளித்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கௌரவ மாநிலத்தலைவர் அ.மாயவன்,  தலைமை தாங்குகிறார்.  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையாசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் எம்.இரவிச்சந்திரன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் ஆர்.பெருமாள்சாமி, உடற்கல்வி ஆசிரியர் கழகம் என்.இரவிச்சந்திரன், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பி.பேட்ரிக் ரெய்மெண்ட், இடைநிலை ஆசிரியர் சங்கம் அ.சங்கர், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் என்.ரவிச்சந்திரன், பதவி உயர்வு பெற்ற தமிழாசிரியர் சங்கம் டி.உதயசூரியன், பட்டதாரி ஆசிரியர் கழகம் எஸ்.பாஸ்கரன் ஆசிரியர் முன்னேற்ற பேரவையின் பி.ஆரோக்கியதாஸ், தமிழக தமிழாசிரியர் கழக என்.தாயுமானவன், நிதி உதவி பெறும் ஆசிரியர் கூட்டமைப்பின் டி.க்கராஜ், அரவு உதவி பெறும் ஆ.அ.கழகம் எஸ்.பி.பழனிவேலு, பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்க எம்.வி.ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுநர் சங்கம் சி.முருகன், வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்கம் கே.செல்வகுமார், பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பின் எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


கோரிக்கைகள்.

  1. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும்
  2. ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமையை மீண்டும் வழங்கிட வேண்டும்
  3. அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் தொகப்பூதிய ஆசிரியர்களையும் முழுநேர ஆசிரிர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
  4. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து வேலூர் காட்பாடி கே வி குப்பம் குடியாத்தம் அணைக்கட்டு கணியம்பாடி ஆம்பூர் வாணியம்பாடி ஆற்காடு வாலாஜா அரக்கோணம் ஆகிய பகுதியிலிருந்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க பயணம் மேற்கொண்டனர்.

- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad