அப்பொழுது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வசீகரன் (வயது 22) மற்றும் ஹாசிம் (வயது 23) என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் தரணம்பேட்டை பகுதியில் உள்ள எலக்ட்ரிகல்ஸ் கடையில் செம்பு கம்பிகள் திருடியதும் மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய வீடுகளில் இருந்து செம்பு கம்பிகள் திருடி வந்ததும் விசாரணை தெரிய வந்தது
இதனையடுத்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செம்பு கம்பிகள் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து மேலும் இது குறித்து குடியாத்தம் நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

No comments:
Post a Comment