வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும் தோப்பு என்எஸ்கே நகர் பகுதி மக்கள் கவுண்டன்யா ஆற்றில் வீடு கட்டி வசித்து வந்தார்கள் தற்போது அந்த வீடுகளை நீதிமன்றம் உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தப்பட்டது அதில் 92 பயளாளிகளுக்கு இன்று வட்டாச்சியா் அலுவலத்தில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க வட்டாட்சியர் எஸ் விஜயகுமார் அவர்கள் தலைமை தாங்கிளார் .


குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், வருவாய் கோட்டாட்சியர் மு. வெங்கட்ராமன், நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன், ஒன்றிய பெருந்தலைவர் என்இ. சத்யானந்தம் ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி. தலித் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துரை, செல்வம் மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment