வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றி வந்த க.முனுசாமி அவர்கள் சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக பணிமாறுதல் பெற்று சென்றதால் இப்பணியிடத்தில் திண்டிவனம் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்க க்கல்வ) எஸ்.மணிமொழி அவர்கள் பதவி உயர்வு பெற்று இன்று மாலை பணியில் சேர்ந்த்தார்.


அவருக்கு ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அ.சேகர், செ.நா.ஜனார்த்தனன், கருணாநிதி, முகமது ஷாநவாஷ் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.சீனிவாசன், மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜேஸ்கண்ணா, ஆர்.எஸ்.அஜீஸ்குமார், ஜி.டி.பாபு, வாரா, வி.நாகலிங்கம், எஸ்.ரமேஷ், எச்.ராம்மூர்த்தி, முதன்மைக்கல்வி அலவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜெயசங்கர், கோபாலகிருண்ணன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட உதவி அலுவலர் எஸ்.மகாலிங்கம், நேர்முக எழுத்தர் தமிழ்செல்வி, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் எஸ்.எஸ்.சிவவடிவு, எம்.சினேகலதா, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் திருநாவுக்கரசு, எ.ஜெயதேவரெட்டி, உமாதேவன், கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை, கார்த்திகேயன், சண்முகம், முதன்மைக்கல்வி அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அப்போது ஆசிரியர்களிடையே பேசிய முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.மணிமொழி அவர்கள் கூறியதாவது வேலூர் மாவட்டத்தின் கல்வித்தரத்தினை உயர்த்திட அனைவரும் இணைந்து பாடுபடுவோம். ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய முறையில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்கியராஜ்.
No comments:
Post a Comment