மணிப்பூர் மாநில அரசையும் நடவடிக்கை எடுக்க தவறிய ஒன்றிய அரசையும் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 26 July 2023

மணிப்பூர் மாநில அரசையும் நடவடிக்கை எடுக்க தவறிய ஒன்றிய அரசையும் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்.


இரு பிரிவினரிடையே தூண்டப்பட்ட வெறுப்புணர்வின் காரணமாக உருவாக்கப்பட்ட கலவரத்தில் மிக மோசமான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு இரண்டு பெண்கள் ஆடைகள் களையப்பட்டு உர்வலமாக இழுத்துச்செல்லப்பட்டு கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்ட நிகழ்வுகளை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (25.07.2023) மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ட்டி.டி.ஜோஷி, தலைமை தாங்கினார். இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு ஆரம்ப்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ.சீனிவாசன் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத்தலைவர் அ.சேகர் ஆர்ப்பாட்டத்தினை தொடக்கி வைத்து பேசினார். உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.சினேகலதா, கூட்டமைப்பின் நிர்வாகிகள் பெ.இளங்கோ, வாரா, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க பா.செல்வகுமார், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மனித நேயமற்ற யெலை கண்டித்தும், கும்பலால் வன்புணர்வு செய்யப்பட்டது, வன்முறைகள் தொடர்ந்து நடைபெறுவது, வன்முறைகள் கட்டுப்படுத்தபடாமல் தொடர்ந்து நிகழ்ந்து வருவதையும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக உள்ள நிலைக்கு கொண்டு சென்றதையும் பெண்கள் மீமான வன்முறைகளை தடுக்க தவறிய  மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad