தமிழ் தாய் வாழ்த்து பாடி பின்னர் மாணவிகள் குத்து ஏற்றினார்கள், விழா இனிதே துவங்கியது . மூன்றாமாண்டு ஆங்கிலத் துறையைச் சார்ந்த மாணவி கீர்த்தனா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் . எம் . என் ஜோதிகுமார், கல்லூரி இயக்குனர் K. ஜோதிராம், துணைத்தலைவர்திரு. M. பிரகாசம், செயலாளர் TN சிட்டிபாபு, முதல்வர் முனைவர் R.S. வெற்றிவேல், நிர்வாக அலுவலர் K. முருகவேல் ஆகியோர் மாணவிகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் அறிவுரைகளை வழங்கி வரவேற்றனர்.


மேலும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு நம்பிக்கையூட்டும் பதில் அளித்தவாறு நடைபெற்ற நிகழ்வில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி அம்ரீன் அவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி அம்மாணவியின் பெற்றோருக்கும் கல்லூரியின் தலைவர் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்தார். பேராசிரியர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். துணை முதல்வர் முனைவர் M.C. சுபாஷினி நன்றியுரை நல்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
Reporter Bakkiyaraj Vellore, [07-07-2023 19:14]
[ Album ]
No comments:
Post a Comment