அரசுக்கு சொந்தமான இடத்தில் இரும்பு வேலி அமைத்ததால் இரு தரப்பினிடம் பேச்சு வார்த்தை . - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 8 July 2023

அரசுக்கு சொந்தமான இடத்தில் இரும்பு வேலி அமைத்ததால் இரு தரப்பினிடம் பேச்சு வார்த்தை .


வேலூர் மாவட்டம் கேவி குப்பம் வட்டம் தேவரிஷிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட  கொம்ம குப்பத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு, கங்கை அம்மன் கோவில், முருகர் கோயில், மேல் நீர் தேக்க தொட்டி, விளையாட்டு திடல் ஆகியவை  உள்ளன. இந்நிலையில் அங்கு சென்ற மாதம் திருவிழா நடைபெற்றது.  


திருவிழா முடிந்தவுடன் ஒரு தரப்பினர் அந்த இடத்தில் மது அருந்துவது, குப்பை கொட்டுவது, மலம் கழிப்பது போன்ற சமூக விரோத செயல்  நடைபெறுவதாக கூறி அந்த இடத்தை சுற்றி இருப்பு வேலி அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றொரு தரப்பினர் கேவி குப்பம் வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். ஆனால்  வட்டாட்சியர் மூலம் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து,  வருவாய் கோட்டாட்சியர் மு வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

இறுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த வேலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும்,  சமூக விரோத செயல்கள் நடைபெற்றால் காவல்துறை புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரு தரப்பினர் பேச்சுவார்த்தையில் தீர்மான நிறைவேற்றப்பட்டது, இதில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கலைவாணி கே வி குப்பம் வட்டாட்சியர் கீதா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad