வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தமிழ்மாநில விசாய தொழிலாளர் சங்க பேரவைக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மூஞ்சூர்பட்டு கிராமத்தில் டி.முனுசாமி தலைமை தாங்கினார், நா.பரமசிவம் கொடியேற்றி துவக்கி வைத்தார்.
எஸ்.காவேரி வரவேற்று பேசினார், எல்.மணி, டி.ஆனந்தன், கே.சி.பிரேம்குமார், ஆர்.வேலாயுதம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். ஜி.லதா மு.ச.ம.உ, மாவட்டசெயலாளர் சிறப்புரையாற்றினார். ஏழு பேர் புதிய நிர்வாகிகளாக ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர் கே.சி.பிரேம்குமார், மாவட்ட செயலாளர், ரோஸ் மாவட்ட தலைவர், சாந்தி பொருளாளர், டி.மணியரசன் துணைத்தலைவர், ஜி.முனுசாமி, துணைத்தலைவர் ஆர்.அக்பர், துணைசெயலாளர் அருள்குமார், துணையெலாளர் மாநில மாநாட்டு பிரதிநிதிகள் கே.சி.பிரேம்குமார், ரோஸ், எஸ்.காவேரி, வாசுகி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தீர்மானங்கள்
- வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்கவேண்டும், வீடு கட்ட ரூ.10,00,000/- பத்து லட்சம் நிதி வழங்கவேண்டும்.
- தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை ஊழலற்ற முறைகேடுகள் இல்லாமல் செயல் படுத்தவேண்டும், தேசிய ஊரக் வேலை உறுதியளிப்பு திட்டதொழிலாளர்களுக்கு 200 நாட்கள் வேலையும் ரூ.600/- தினக்கூலியாக வழங்கவேண்டும்.
- மணிப்பூரில் பற்றி எரியும் தீயை பற்ற வைத்து வேடிக்கை பார்க்கின்ற மாநில ஒன்றிய பி.ஜே.பி.அரசுகள் தார்மீக பொருப்பேற்று பதவி விலக வேண்டும். இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கிய மனித மிருங்களை கைது செய்து நடவடிககை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறை வேற்றப்படடது.
இறுதியில் ஆர்.அக்பர் நன்றியுரை கூறினார், நூற்றுக்கு(100) மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர் கலந்துகொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

No comments:
Post a Comment