கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா பொது கூட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 9 July 2023

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா பொது கூட்டம்!


வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி மத்திய ஒன்றியம் திமுக சார்பில் கரடிகுடி ஊராட்சி கிராமத்தில் கலைஞர் திடல் மத்திய ஒன்றிய செயலாளர் P.வெங்கடேசன் அவர்கள் தலைமையிலும் மத்திய ஒன்றிய அவைத்தலைவர் R.C.மணிமாறன் அவர்கள் வரவேற்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா முன்னிட்டு பொது கூட்டம் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் தலைமை கழக பேச்சாளர் கவிஞர் ஈரோடு இறைவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.


அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு,ஒன்றிய செயலாளர்கள் கோ.குமாரபாண்டியன் N.கஜேந்திரன், ஒன்றிய பெருந்தலைவர் C.பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் P.கிருஷ்மேணன், ஊராட்சி மன்ற தலைவர் C.கிரிதரன் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.




வேலூர் மாவட்ட செய்தியாளர் 

மு. பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad