வேலூரில் திராவிட நட்பு கழக நிறுவனர் சுப.வீரபாண்டியன் ஒருங்கிணைப்பில் மத நல்லிணக்க மாநாடு ஜூலை 9 ஆம் தேதி மாலை பெரியார் பூங்காவுக்கு அருகே நடைபெற்றது. இம்மத நல்லிணக்க மாநாடு, மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.எஸ்.நாசர்உமரி அவர்கள் தொடக்க உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.


இதில் திராவிட நட்பு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சிங்கராயர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைருமான வேல்முருகன், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், நடிகர் சத்யராஜ் மற்றும் அனைத்து மத குருமார்கள் கலந்து கொண்டனர்.
நாட்டின் ஒருமைப்பாடும், சகோதரத்துவமும், மத நல்லிணக்கமும் பேணி காக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மாநாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் முஹம்மது யாசின், மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் மு.பாக்கியராஜ்.

No comments:
Post a Comment