வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை குறித்து இன்று (11.7.23) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் குடியாத்தம் ஆர் எஸ் ரோடு ஸ்ரீ வைஷ்ணவி மஹாலில் நகர கழக செயலாளர் J.K.N.பழனி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா R.மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். நகர கழக செயலாளர் J.K.N.பழனி உறுப்பினர் சேர்க்கை படிவம் குறித்தும் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்தும் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு நகர கழக நிர்வாகிகள் A.ரவிச்சந்திரன், M.பூங்கொடி மூர்த்தி, K.அமுதா கருணா, S.N.சுந்தரேசன், S.I.அன்வர் பாஷா, R.K.மகாலிங்கம், G.தேவராஜ், M.K.சலீம், R.அட்சயா வினோத்குமார், S.D.மோகன்ராஜ், K.லாவண்யா குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வார்டு கழக செயலாளர்கள், நகர சார்பணி செயலாளர்கள், வார்டு கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட கழக துணைச் செயலாளர் S.அமுதா சிவப்பிரகாசம் அவர்கள் நன்றியுரை கூறினார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ்.


No comments:
Post a Comment