தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வடக்கு ஒன்றியம் சார்பில் சாஸ்திரமுட்லு கிராமத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இனணயும் விழா வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செந்தில் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் சாஸ்திரமுட்லு, உலாகனஅள்ளி, கெண்டேயனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திமுக , பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டணர்.
கட்சியில் இணைந்த புதிய உறுப்பிணர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து அனைவரையும் வரவேற்று பேசியதாவது.
மீண்டும் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று, திமுக அரசு நிறுத்திய மக்கள் நலத்திட்டங்களான, முதியோர் ஓய்வூதியம், தாலிக்கு தங்கம், மடிக்கணிணி, மகளிர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மீண்டும் செயல் படுத்துவோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், முன்னாள் நகர செயலாளர் ரங்கநாதன், மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், நகர செயலாளர்கள் ராஜா, கோவிந்தன், மாவட்ட கவுன்சிலர் சரவணன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் மணிவண்ணன், மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment