2047ல் இந்தியா இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 September 2023

2047ல் இந்தியா இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி.


இந்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர்கள் நலனுக்காக நேரு யுவகேந்திரா நேரு யுவகேந்திரா டாக்டர் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை, விபி பாரா மெடிகல் கல்லூரியும் இணைந்து இந்தியா 2047 பற்றி இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று காட்பாடி காந்திநகர் விபி பாரா மெடிகல் கல்லூரி வளாகத்தில் கல்லூரி தலைவர் பி.சுரேஷ்குமார் தலைமை தாலைமையில் நடைபெற்றது.

குறிப்பாக சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் கழித்து வரும் 2047 ல் எப்படிப்பட்ட இந்தியாவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற கேள்வியுடனான தலைப்பில் கருத்துக்கள் பரிமாற்றம் நடத்தப்பட்டது.

முன்னதாக காட்பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலந்துரையாடல் நிகழ்வினை துவக்கி வைத்து பேசினார்.   அப்போது அவர் கூறியதாவது  நாட்டின் வளர்ச்சியே ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சி என்பதை வலியுறுத்தும் வகையில் அனைவரும் கல்வி. வளர்ச்சியில் முழுமை பெற்றிருக்க வேண்டும். நாம் வளர்ந்தால் தான் நாடு வளர்ச்சியடையும் எனவே ஒவ்வொரு இளைஞரும் கல்வியிலும், ஆற்றலிலும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.  

பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்களும் பரிசும் வழங்கி பாராட்டப்பட்டனர், நேரு யுவ கேந்திரா அமைப்பின் மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பாரத் குமார் நுலகசவல்லா முன்னிலை வகித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது  இந்த அமைப்பின் மூலம் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது ஒவ்வொரு இளைஞர்களிடமிருந்து அவர்களின் தனித்திறமை மற்றும் பொது நலன் குறித்து அவ்வப்போது கருத்துக்கள் கேட்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பாட்டுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

வளர்ந்த இந்தியாவின் இலக்கு என்ற தலைப்பில் காட்பாடி ரெட்கிராஸ் அவை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் காலனித்துவ மனநிலையின் தடயங்களை நீக்குதல் என்ற தலைப்பில் கே.லிடியாசாந்தகுமாரி,  எங்கள் பாரம்பரியத்தில் பெருமை கொள்ளுங்கள் என்ற தலைப்பில் ஜி.சுபலட்சுமி, நமது ஒற்றுமையே பலம் என்ற தலைப்பில் கல்லூரி துணை முதல்வர் எல்.பிரியதர்ஷிணி, குடிமக்களின் கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுதல் என்ற தலைப்பில் கல்லூரி முதல்வர் ஜி.தங்கமணி கருத்துரையாற்றினார்கள் பின்னர் பன்ச் பிரான் என்ற இந்திய அரசின் இளைஞர்களுக்கான ஐந்து உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர் .

இளைஞர்களின் தேசிய ஒருங்கிணைப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் (நிர்வாகம்) சோபியா பிரின்சி நன்றி கூறினார்.  கல்லூரி விரிவுரையாளர் சிறிஸ்டல் பியுலா நிகழ்களை ஒருங்கிணைத்தார்.

- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad