ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயண ஓராண்டு நிறைவு விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 9 September 2023

ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயண ஓராண்டு நிறைவு விழா.


ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயண ஓராண்டு நிறைவை கொண்டாடும் வகையில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடியாத்தம் நகரம் பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் இந்திய ஒற்றுமை நடை பயண ஓராண்டு நிறைவு கல்வெட்டு திறப்பு விழாவும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழாவும் 7/9/2023 வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்விற்கு குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் NMD.விக்ரம் முன்னிலை வகித்தார். வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் நவீன் பிரபு வரவேற்புரை ஆற்றினார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஓராண்டு நிறைவு கல்வெட்டை வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சுரேஷ் .குமார் அவர்கள் திறந்து வைத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். 

நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி. கிருஷ்ணவேணி ஜலந்தர், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர். மோகன்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர். கிருபானந்தம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், ஷங்கர், செல்வகுமார், பெரியசாமி, தனசேகரன், விஜயகுமார், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் விஜயேந்திரன், தேவகிராணி ராஜேந்திரன், உவைஸ் அஹமத், MD. ராகீப், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜய் பாபு, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கோமதி குமரேசன், மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் அன்பரசன், மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் யுவராஜ், ராகுல் விளையாட்டு அமைப்பின் மாநில தலைவர் ஆனந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகேஷ் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad