வேலூர் மாவட்டம் தி.மு.க.வின் பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா, வேலூர் அடுத்த கந்தனேரியில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில், தி. மு. க. தலைவரும், முதல் அமைச்சருமான மு. க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அன்று காலை முதல் மாலை வரை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.
இதில் வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் முதல் - அமைச்சர் பங்கேற்று, வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல் - அமைச்சர் வேலூருக்கு வருகிற 16-ந் தேதி வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்

No comments:
Post a Comment