இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டிடக்கூலி தொழிலாளியை தாக்கி வாகனத்தை பறித்துச் சென்ற கும்பல்- போலீசார் விசாரணை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 14 September 2023

இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டிடக்கூலி தொழிலாளியை தாக்கி வாகனத்தை பறித்துச் சென்ற கும்பல்- போலீசார் விசாரணை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜா இவர் கட்டிட கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் .இதனிடையே இவர் இன்று வேலையை முடித்துவிட்டு இரவு குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் கவுண்டன்யா ஆற்று தரை பாலம் வழியாக சென்றுள்ளார்.

அப்பொழுது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அவரை தாக்கி விட்டு அவர் ஓட்டி வந்த புதிய ஸ்ப்ளெண்டர் வாகனத்தை பறித்துச் சென்றுள்ளார். மேலும் காயமடைந்த ராஜா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad