காட்பாடி அக்கிரெட்டிபுதூரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவரது தம்பி சந்திரசேகர் (வயது35) ஆட்டோடிரைவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு, அண்ணனிடம் தகராறில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
மது போதையில் வீட்டுக்கு வந்த சந்திரசேகர், அண்ணன் அசோக்குமாருடன் தகராறில் ஈடுப்பட்டார். இதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஆவேசமடைந்த சந்திரசேகர், அசோக்குமாரின் ஆள்காட்டி விரலை கடித்து துப்பிவிட்டார். வலி தாங்காமல் துடித்த அசோக்குமாரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து அசோக்குமார் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் மு.இன்பராஜ்

No comments:
Post a Comment