வேலூர் மாவட்டம் பாரதி ஜனதா கட்சி சார்பில் சனாதனம் குறித்து கருத்து கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும், வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை பா.ஜ.க. ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பின்னர் அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் பாஸ்கர், பா. ஜ. க. வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன், கவுன்சிலர் சுமதி, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:
Post a Comment