வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 13 September 2023

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் காட்பாடியில் நடந்தது. காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா தெற்கு பகுதி செயலாளரும், துணை மேயருமான எம். சுனில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக செயலாளர் ஜி. வன்னியராஜா தலைமை தாங்கினார். திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்காத காலத்திலேயே முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனுக்கு காட்பாடி தொகுதியில் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தோம். இப்போது நடைபெற உள்ள நாடாளுமன்றதேர்தலில் 6 சட்டமன்ற தொகுதியில் காட்பாடி தொகுதியில் அதிக வாக்குகள் பெறுவார்கள்.


வருகிற 17-ந் தேதி வேலூரில் தி. மு. க. பவளவிழா மற்றும் முப்பெரும் விழா நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா வேலூர் கோட்டையில் வரலாறு படைக்கும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார். அவருடைய கூற்றை மெய்பிக்கும் வகையில் நிர்வாகிகள் திரளாகவிழாவிற்கு வர வேண்டும் என கூறினார்.


- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad